TO GATHER INFORMATION ABOUT STOCKS IN TAMIL.

Ads Here

Monday, June 14, 2021

டிரேடர் அல்லது முதலீட்டாளர்.

பங்குசந்தை எனும் கடலில் இருவர் உள்ளனர், ஒருவர் டிரேடர் மற்றொருவர் முதலீட்டாளர். முதலீட்டாளர் என்பவர்  ஃபண்டமென்டல் அனாலிசிஸ் முக்கியத்துவம் தருவார். டிரேடர் என்பவர் டெக்னிகல் அனலைசிஸ் மீது அதிக முக்கியத்துவம் தருவார்.

ஃபண்டமென்டல் அனாலிசிஸ் என்பது பங்கின் மூலதனம், சொத்து மதிப்பு, வருவாய்,கடன், அதனுடைய விற்பனை,லாபம் ஈட்டுவது போன்ற பல அம்சங்களைை உள்ளடக்கியது.

டெக்னிக்கல் அனாலிசிஸ் என்பது வரை படத்தை (chart analysis) அனலைசிஸ் செய்து. வரைபடத்தில் அதன் வாலியும்,அதன் ஏற்ற இறக்கம், அதனுடைய மூவிங் ஆவரேஜ் (moving average), கேப் அப்(gap up), கேப் டவுன் (gap down), ட்ரெண்ட்டை கணக்கில் கொண்டு முடிவு செய்வது.

முதலீட்டாளர்கள் நீண்டகால முதலீட்டாளர், குறுகிய கால முதலீட்டாளர்கள்,மத்தியகால முதலீட்டாளர்கள் போன்று மூன்று வகை படுகின்றனர். நீண்ட கால முதலீட்டாளர்கள் குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்து காத்திருப்பார்கள். குறுகிய கால முறையிட்டார்கள் 3 முதல் ஆறு மாதம்  வரை முதலீடு செய்து காத்திருப்பார்கள். மத்தியகால முதலீட்டாளர்கள் 1 முதல் 3 வரை முதலீடு செய்பவர்கள்.

மேலும் முதலீட்டாளர்களை Growth investor, Dividend investor,Valid investor,passive investor,countor investor,Defensive investor என்று அவர்கள் முதலீட்டுக்கு தகுந்தவாறு பரவலாக பிரிக்கப்படும்.

குரோத் இன்வெஸ்டர்  காலாண்டு முடிவுகள் நன்கு தரும்  வளரும் பங்குகளில் முதலீடு செய்வார்கள். அவர்கள் அதிகமாக midcap stock பங்குகளை தேர்வு செய்வார்கள். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் அவை 100% வளர்ச்சியை எட்ட விரும்புவார்கள்.

டிவிடெண்ட் இன்வெஸ்டார் டிவிடெண்ட் நன்கு தரும் பங்குகளை வாங்குவார்கள். Hind zinc,Sun tv,coal India, ஆயில் நிறுவனங்கள் போன்ற பங்குகளைை தேர்வு செய்வார்கள்.

Valid investor நன்கு  வளர கூடிய மற்றும் டிவிடெண்ட் தரக்கூடிய பங்குகளை தேர்ந்தெடுப்பார். அதன் புத்தகம் மதிப்பிற்கு விலை அருகில் உள்ள நிறுவனங்களை தேர்ந்தெடுப்பார். ஃபண்டமெண்டல் மற்றும் டெக்னிக்கல் இரண்டையும் அலசி ஆராய்ந்து பார்த்து சரியான விலையில்  வாங்குவார்கள்.

No comments:

Post a Comment